முகப்பு
கிரிக்கெட்

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன? கேப்டன் பதில்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பேசியுள்ளார்.

Updated On : 2 ஜூலை 2026, 8:31 pm IST
கேப்டன் சோஃபி மோலினக்ஸ் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பேசியுள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஓவலில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூலை 2) மோதுகின்றன.

இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் பேசியுள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இறுதிப்போட்டிக்கு முன்பாக ஐந்து நாள்கள் இடைவெளி உள்ளது. நன்றாக உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டதைக் கொண்டாட வேண்டும். அதைக் கண்டிப்பாக செய்வோம். இறுதிப்போட்டி குறித்து அதிகம் யோசித்துக் கொண்டிருக்காமல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். இறுதிப்போட்டியில் நன்றாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூலை 5-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Australian team's captain has spoken about the team's strategy for the final of the ICC Women's T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments