என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் இதுதான்; மனம் திறந்த ஜேக்கப் பெத்தேல்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியதுதான் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் மனம் திறந்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியதுதான் தன்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டின் மான்செஸ்டரில் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய ஜேக்கப் பெத்தேலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஜேக்கப் பெத்தேல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: தொடக்க ஆட்டக்காரர்கள் சீக்கிரமாக ஆட்டமிழந்ததால், நான் கிட்டத்தட்ட டாப் ஆர்டர் வீரர் போன்றே களமிறங்கினேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்ததுடன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நான் சில சதங்கள் அடித்துள்ளேன். ஆனால், அவற்றில் ஒன்று மட்டுமே அணியின் வெற்றிக்கு உதவுவதாக இருந்தது.
நாங்கள் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தோம், இந்தியாவில் தோல்வியடைந்தோம். அந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியவில்லை. ஆனால், இன்று என்னுடைய ஆட்டம் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நாங்கள் இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளோம். இந்தப் போட்டியில் நன்றாக விளையாடியது அடுத்த மூன்று போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என்றார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜேக்கப் பெத்தேல் 46 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
England player Jacob Bethell has opened up, stating that his innings in the second T20 match against India was his best.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.