எம்எல்சி தொடரில் 500 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்..! புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்!
வாஷிங்டன் ப்ரீடம் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் குறித்து...
அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 500 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.
சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிக்கு எதிராக அரைசதம் கடந்தார். இதன் மூலம் அவர் இந்தத் தொடரில் 500 ரன்களை கடந்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலீஸில் போமோனா கிரிக்கெட் திடலில் சான்பிரான்சிஸ்கோ யுனிகார்ன் - வாஷிங்டன் ப்ரீடம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாஷிங்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
Advertisement
Advertisement
முதலில் பேட்டிங் செய்த சான்பிரான்சிஸ்கோ 19.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் மேத்திவ் ஷார்ட் 39 ரன்கள் எடுத்தார்.
வாஷிங்டன் ப்ரீடம் அணி சார்பாக பந்துவீச்சில் ஜேக் ஹெட்வர்ட்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்கள் எடுத்தார். இத்துடன் 500 ரன்களையும் கடந்து சாதனை படைத்துள்ளார். பாஃப் டு பிளெஸ்ஸி அதிகபட்சமாக 1,128 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
எம்எல்சி தொடரில் 2024 தொடரில் கோப்பை வென்ற ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் அணி, 2025ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றது. தற்போது, 2026 சீசனில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.
Steve Smith crosses the 500-run mark in the MLC tournament! Moves up the points table!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.