முகப்பு
கிரிக்கெட்

ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகள்: 131 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி குறித்து...

Updated On : 17 ஜூன் 2026, 4:29 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ். - படம்: ஏபி
பகிர்:

வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி இன்று மதியம் சட்டோகிராமில் தொடங்கியது, டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய வங்கதேச அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிகபட்சமாக மெஹதி ஹாசன் 29 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஸாம்பா, ஜோயல் டேவிஸ் தலா 3 விக்கெட்டுகளும் மாட் ரென்ஷா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

Advertisement

Advertisement

எளிய இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 100/4 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கூப்பர் கானலி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது, மாட் ரென்ஷா, நிகில் சௌதரி களத்தில் விளையாடி வருகிறார்கள். வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் நால்வர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்கள்.

ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-2 என வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது. தற்போது, டி20 தொடரில் வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் விளையாடி வருகிறது.

summary

Adam Zampa, Joel Davies 3 wickets Bangladesh all out for 131 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.