வங்கதேசம் - துருக்கி இடையே அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு!
வங்கதேசம்-துருக்கி இடையே பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களுக்கான உயர்நிலைக் கூட்டுக்குழு
வங்கதேசம் - துருக்கி இடையே பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களில் உயர்நிலைக் கூட்டுக்குழு அமைக்க ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிடான் அந்நாட்டின் பிரதமர் தாரிக் ரஹ்மானைச் சனிக்கிழமை (ஜூன் 6) சந்தித்துப் பேசினார். இருநாட்டுத் தலைவர்களிடையேயான ஆலோசனையில் ஒருமித்த முடிவாக, இவ்விரு நாடுகளுக்குமிடையேயான இருநாட்டு உறவை வலுப்படுத்த பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களில் அமைச்சரவை நிலை கூட்டுக்குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபிடான், ரோஹிங்கியா விவகாரம், காலநிலை மாற்றம், வர்த்தகம், முதலீடு, கூட்டு உற்பத்தி, ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர நலன் ஆகிய விவகாரங்களிலும் ஆலோசனை மேற்கொண்டதாக வங்கதேச அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
Bangladesh and Turkiye have decided to form a joint committee at the ministerial level on defence and foreign affairs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.