FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

தன்சித் ஹாசன், சௌமியா சர்க்கார் அசத்தல்; வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Updated On : 11 ஜூலை 2026, 8:58 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச அணி வீரர்கள் - படம் | AP
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

வெஸ்லி மத்வீர் அரைசதம்; வங்கதேசத்துக்கு 200 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 48.1 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் வெஸ்லி மத்வீர் மற்றும் பிராட் ஈவன்ஸ் இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்லி மத்வீர் 74 பந்துகளில் 75 ரன்களும் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), பிராட் ஈவன்ஸ் 43 பந்துகளில் 50 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, இன்னோசண்ட் கையா 25 ரன்களும், கேப்டன் சிக்கந்தர் ராஸா 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

வங்கதேசம் தரப்பில் சோரிஃபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் தன்விர் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சாய்ஃபுதின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தன்சித் ஹாசன், சௌமியா சர்க்கார் அசத்தல்; வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி!

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 36 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் தமிம் மற்றும் சௌமியா சர்க்கார் மிகவும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. சௌமியா சர்க்கார் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தன்சித் ஹாசன் தமிம் 101 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து 6 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 18 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் எர்னஸ்ட் மசுகு இரண்டு விக்கெட்டுகளையும், டனாகா சிவாங்கா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்சித் ஹாசன் தமிம் ஆட்ட நாயகனாகவும், பிராட் ஈவன்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த வங்கதேசம், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

summary

Bangladesh achieved a magnificent 7-wicket victory in the final ODI against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments