FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 19 ஜூலை 2026, 8:44 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச அணி வீரர்கள் - படம் | AP
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டியான் மையர்ஸ் அரைசதம்; வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டியான் மையர்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

வங்கதேசம் தரப்பில் முகமது சாய்ஃபுதீன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்துல் காஃபர் சாக்லைன், ரிஷாத் ஹொசைன் மற்றும் மஹேதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. இதன் மூலம், டி20 தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹாசன் தமிம் 58 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் தௌஹித் ஹிரிடாய் மற்றும் பர்வேஸ் ஹொசைன் தலா 24 ரன்கள் எடுத்தனர். யாசிர் அலி 10 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் நிகராவா, பிராட் ஈவன்ஸ் மற்றும் கேப்டன் சிக்கந்தர் ராஸா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தன்சித் ஹாசன் தமிம் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Bangladesh team won the final T20 match against Zimbabwe by 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments