சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் சிஎஸ்கேவுக்கு உதவியாக இருக்கும்: பியூஸ் சாவ்லா
சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: சஞ்சு சாம்சனுக்குள் போட்டியை வென்று கொடுக்கும் வீரர் இருக்கிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய மூன்று அரைசதங்கள் விளாசி அவரது திறமை மீது சந்தேகப்பட்டவர்களுக்கு சாம்சன் பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.
சஞ்சு சாம்சன் சிறப்பான ஃபார்மில் இருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியாக உள்ளது. சென்னை ஆடுகளம் சஞ்சு சாம்சனின் ஆட்டத்துக்கு பொருத்தமானதாக இருக்கும். சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பவர்பிளேவில் அதிரடியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆயுஷ் மாத்ரே பிளேயிங் லெவனில் வந்த பிறகே பவர்பிளேவில் அதிக ரன்கள் வந்தன. தற்போது, சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவில் இணைந்துள்ளதால், தொடக்க ஆட்டக்காரர்கள் பிரச்னை சிஎஸ்கேவுக்கு இருக்காது. ஆயுஷ் மாத்ரேவுடன் அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்துள்ளது சிஎஸ்கேவுக்கு மிகப் பெரிய சாதகமான விஷயமாக மாறியுள்ளது என்றார்.
Former Indian cricketer Piyush Chawla has said that Sanju Samson's explosive play will help Chennai Super Kings.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.