பாகிஸ்தான் கேப்டன் ரன்அவுட்.. சர்ச்சையில் சிக்கிய வங்கதேச கேப்டன்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச முதல் போட்டியில் வங்கதேச அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது போட்டி தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதைத் தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 243 ரன்களாக இலக்கு குறைக்கப்பட்டது. இருப்பினும், வங்கதேச அணி 114 ரன்களுக்கு சுருண்டு 128 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியைச் சந்திந்தது.
Advertisement
Advertisement
முன்னதாக, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸின் 39-வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களுடன் வலுவாக இருந்தது. கேப்டன் சல்மான் அலி அகாவும், முகமது ரிஸ்வானும் நான்காவது விக்கெட்டுக்கு 115 பந்துகளில் 109 ரன்கள் குவித்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர்.
ரிஸ்வான் 44 ரன்களுடனும், சல்மான் அலி அகா 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 39 வது ஓவரை வங்கதேச அணியின் கேப்டன் மெஹதி ஹசன் மிராஸ் வீசினார்.
இந்த ஓவரின் 4 பந்தில் முகமது ரிஸ்வான் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தபோது, பந்துவீச்சாளரை நோக்கி பந்தை அடித்தார். அந்தப் பந்து சல்மானின் கால்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
அதனை பந்துவீச்சாளரின் கையில் எடுத்துக் கொடுக்க, மெஹதி ஹசன் மிராஸ் அதனை எதிர்த்திசையில் இருந்த ஸ்டம்பில் அடித்து நடுவரின் ரன் - அவுட்டாக முறையீடு செய்தார்.
மூன்றாவது நடுவரின் உத்தரவின்படி, அது அவுட்டாக அறிவிக்கப்பட்டதும், சல்மான் அலி அகா மிகவும் விரக்தியுடன் தனது கையுறைகள், தலைக்கவசம் எல்லாவற்றையும் உதறித்தள்ளியபடி, வங்கதேச கேப்டன் மெஹதி ஹசனைக் கடிந்து கொண்டு திடலை விட்டு வெளியேறினார்.
இந்த ரன் அவுட் விடியோவை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வங்கதேச அணி அற்புதமான ரன் அவுட் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில், இது கிரிக்கெட்டுக்கு விரோதமானது, நேர்மையாக விளையாட வேண்டும், இதுபோன்று செயல்படக்கூடாது என்றும், இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்றும் ரசிகர்கள் பலர் கொந்தளித்துள்ளனர்.
Mehidy's decision to go for the run out could potentially reignite the tedious 'spirit of cricket' debate again, there is an argument to be made that Salman was out even if the bowler's underarm throw hadn't hit the stumps.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.