சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு கேப்டன் பொறுப்பு... ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஆசிய போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி சர்ச்சையில் சிக்கிய வீரருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜப்பானின் ஐச்சி மாகாணம் மற்றும் நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் செப். 19 ஆம் தேதி தொடங்கி அக்.4 ஆம் தேதி வரையும், இதில் கிரிக்கெட் தொடர் செப். 24 ஆம் தேதி தொடங்கி அக். 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
ஐச்சி மாகாணத்தில் உள்ள கோரோகி தடகள திடலில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், மலேசியா, ஹாங்காங் மற்றும் ஓமன் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆசியப் போட்டிகளில் விளையாட சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக 30 வயதான சாஹிப்சதா ஃபர்ஹானும், துணை கேப்டனாக அப்துல் சமத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய வீரரான சாஹிப்சதா ஃபர்ஹான் 46 டி20 போட்டிகளில் விளையாடி, 1,305 ரன்கள் குவித்துள்ளார். அதில், இரண்டு சதங்கள், 10 அரைசதங்கள் விளாசியுள்ளார்.
தேசிய அணியில் விளையாட அகிஃப் ஜாவேத், அலி ரஸா, மாஸ் சதாக்கத் மற்றும் சாத் மசூத் ஆகிய நான்கு வீரர்களுக்கு முதல்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி விவரம்
சாஹிப்சாதா ஃபர்ஹான் (கேப்டன்)
அப்துல் சமத் (துணை கேப்டன்)
அப்ரார் அகமது
அகமது டேனியல்,
அகிஃப் ஜாவேத்
அலி ரஸா
அராபத் மின்ஹாஸ்
ஹைதர் அலி
ஹசன் நவாஸ்
மாஸ் சதாகத்
முகமது சல்மான் மிர்சா
சாத் மசூத்
சைம் அயூப்
சுஃப்யான் மொகிம்
உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்)
முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பின்னரும் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கும் சம்பிரதாயங்களும் நிகழவில்லை.
இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைக்குரிய அரசியல் நோக்கம் கொண்ட சைகைகளைச் செய்திருந்தனர்.
பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததும் தனது கிரிக்கெட் பேட்டை துப்பாக்கி போன்று வைத்து ரசிகர்களை நோக்கி சுடுவதை போன்று சைகை காட்டி சர்ச்சையில் சிக்கி அபராதத்தையும் பெற்றிருந்தார்.
Pakistan on Wednesday named a largely inexperienced 15-member squad for the men's T20 cricket competition at the Asian Games in Aichi-Nagoya, Japan, with opener Sahibzada Farhan appointed captain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.