பாகிஸ்தானை சொந்த மண்ணில் முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்தது வங்கதேச அணி!
வங்கதேச அணி தனது சொந்த மண்ணில் பாகிஸ்தானை முதல்முறையாக ஒயிட்வாஷ் செய்ததைப் பற்றி...
முதல்முறையாக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து வங்கதேச அணி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், சில்ஹெட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்களும், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னின்ஸில் 232 ரன்களும் எடுத்தன. முன்னிலையுடன் ஆடிய வங்கதேச அணி இரண்டாவது இன்னின்ஸில் 390 ரன்களில் ஆல்-அவுட்டாக, பாகிஸ்தான் அணிக்கு 437 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியால் 97.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், வங்கதேச அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
அதிகபட்சமாக பாகிஸ்தான் அணித் தரப்பில் முகமது ரிஸ்வான் 94 ரன்களும், சல்மான் அலி அகா, கேப்டன் ஷான் மசூத் இருவரும் தலா 71 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணித் தரப்பில் தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் 126 ரன்கள் விளாசிய வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் ஆட்டநாயகன் விருதையும், 137 ரன்கள் விளாசிய முஷ்பிகுர் ரஹிம் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
Bangladesh scripted another memorable chapter in their Test cricket journey after defeating Pakistan national cricket team by 78 runs in the second Test at the Sylhet International Cricket Stadium to seal a dominant 2-0 series whitewash.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.