முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?
முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வைரலான துண்டுச் சீட்டு குறித்து...
முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் ரகு சர்மா தனது விக்கெட்டை கொண்டாடிய போது ஒரு துண்டுச் சீட்டையும் எடுத்து வந்தார். அந்தச் சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை டாஸ் வென்று பந்துவீச, லக்னௌ அணி 20 ஓவர்களில் 228/ 5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய 18.4 ஓவர்களில் 229/4 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ரகு சர்மா தனது இரண்டாவது ஐபிஎல் போட்டியை விளையாடுகிறார். அவர் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 13ஆவது ஓவரில் அக்ஷத் ரகுவன்ஷியை ஆட்டமிழக்க வைத்தார்.
Advertisement
Advertisement
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இவர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த துண்டுச் சீட்டை கையில் எடுத்து காண்பிப்பார். சூர்யகுமார், பும்ரா இந்தச் சீட்டை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அந்தச் சீட்டில், “ராதே ராதே. வலி மிகுந்த 15 ஆண்டுகள், குருதேவாவின் கருணை இன்று முடிவடைந்தது. எனக்கு வாய்ப்பளித்த நீலம், தங்க நிறத்துக்கு (மும்பை இந்தியன்ஸ்) நன்றி. எப்போது கடமைப்பட்டுள்ளேன். ஜெய் ஸ்ரீ ராம்” என எழுதப்பட்டிருந்தது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் அபிஷேக் சர்மா சதம் அடித்த பிறகு இந்தமாதிரியான துண்டுச் சீட்டைக் காண்பித்தது வைரலானது.
MI’s Raghu Sharma takes out chit after picking up maiden IPL wicket; Suryakumar, Bumrah reactions and what it wrote
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.