ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!
சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்த்தது குறித்து...
சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே பிளேயிங் லெவனில் தேர்வாகாமல் இம்பாக்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஃபீல்டிங்கில் சொத்தப்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி அருண் ஜெட்லி திடலில் மோதுகிறது. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிக்ஸ் 6ஆவது இடத்திலும் தில்லி கேபிடல்ஸ் 7ஆவது இடத்திலும் 8 புள்ளிகளுடன் இருக்கின்றன.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் வெல்லும் அணிக்கு பிளே ஆப்ஸுக்கான வாய்ப்பு அதிகமாகும் என்பதால் மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
சிஎஸ்கே அணி பந்துவீச்சில் சிறப்பாக இருந்தும் ஷிவம் துபே பல போட்டிகளில் மோசமான ஃபீல்டிங்கில் மூலம் பல கேட்சுகளை தவறவிட்டார். அதனால், அவர் இம்பாக்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shivam Dube is not in the Playing XI! Included in the Impact Player list!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.