கட்டா குஸ்தி 2 படத்தில் இம்பாக்ட் பிளேயராக ரம்யா கிருஷ்ணன்!
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அறிமுக போஸ்டர் குறித்து...
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் இம்பாக்ட் பிளேயராக நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டியில்தான் இந்த இம்பாக்ட் பிளேயர் என்ற விதி இருக்கிறது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர் அல்லது பேட்டருக்குப் பதிலாக மாற்று வீரரைக் களமிறக்கலாம் என்பதுதான் அந்த விதி குறிப்பிடுகிறது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன ராஜ ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழு இவர் இம்பாக்ட் பிளேயராக நடித்துள்ளதாகக் கூறியுள்ளது. படமும் விளையாட்டு சம்பந்தப்பட்டது என்பதால் சுவாரசியம் கூடியிருக்கிறது.
Gatta Kusthi 2 ramya krishnan on board as the impact player
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.