10 நாள்களில் கட்டா குஸ்தி - 2 வசூல் இவ்வளவா?
கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் வசூல் பற்றி...
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வெளியான 10 நாள்களில் உலகளவில் ரூ. 44.5 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் திங்கள்கிழமை (ஜூலை 13) அறிவித்துள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான நாள் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றிப்படமாகவும் மாறியுள்ளது கட்டா குஸ்தி - 2.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 10 நாள்களில் உலகளவில் ரூ. 44.5 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால், விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The production company officially announced on Monday (July 13) that the film Gatta Kusthi 2 has grossed ₹44.5 crore worldwide within 10 days of its release.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.