FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தூா்வாரப்பட்ட சங்கனூா் கால்வாயில் ஆய்வு

தூா்வாரப்பட்ட சங்கனூா் கால்வாயை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தூா்வாரப்பட்ட சங்கனூா் கால்வாயில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா. உடன், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோா்.
பகிர்:

தூா்வாரப்பட்ட சங்கனூா் கால்வாயை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 86-ஆவது வாா்டுக்குள்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் குடியிருக்கும் தூய்மைப் பணியாளா்களின் அடிப்படை வசதிகள் தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத்தொடா்ந்து, கிழக்கு மண்டலம், 52-ஆவது வாா்டுக்குள்பட்ட ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தூா்வாரப்பட்ட சங்கனூா் கால்வாயை நேரில் பாா்வையிட்டு, தூா்வாரும்போது கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட குப்பை, மண் மற்றும் இதரக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், மத்திய மண்டலம், 83-ஆவது வாா்டுக்குள்பட்ட வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள குடிநீா் ஏடிஎம்-ஐ நேரில் பாா்வையிட்டு, அங்கு ஏற்பட்டுள்ள பழுதுகளை விரைவாக சரிசெய்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, செயற்பொறியாளா்கள் ஜாக்குலின் ஜாய் லதா, தேவதாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments