FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கட்டா குஸ்தி 2 ரொம்ப ஜாலியான செம்ம படம்... ரஜினி பாராட்டு!

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து.

Updated On : 14 ஜூலை 2026, 8:09 pm IST
ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் - படம் - எக்ஸ்
பகிர்:

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

கட்டா குஸ்தி - 2 படம் நன்றாக இருப்பதாகவும் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

Advertisement

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வணிக ரீதியாக வெற்றிப்படமாகவும் மாறியுள்ள இந்தத் திரைப்படம் வெளியான 10 நாள்களில் ரூ. 44.5 கோடியை வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாவது:

செம்ம படம். ரொம்ப ஜாலியான பொழுதுபோக்கான படம். இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்லை. ரொம்ப நல்லா நடித்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் நல்லா நடித்திருக்கிறார். குட்டி ஜாரா பாப்பா, எப்படி புடிச்சீங்க. அவள் மிகவும் அற்புதம். விஷ்ணு உங்களுடைய கதைத் தேர்வு நல்லா இருக்கு. இன்னும் நல்ல படங்கள் நிறைய கொடுங்க... என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

summary

Actor Rajinikanth watched the movie Gatta Kusthi 2 and praised the film crew.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments