எத்தனை ரூ. 500 கோடி..? சிம்ம சொப்பனமாகத் திகழும் சூப்பர் ஸ்டார்!
அதிக முறை ரூ. 500 கோடி வசூலில் ரஜினிகாந்த்....
நடிகர் ரஜினிகாந்த் அதிக முறை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் யார் என்கிற கேள்விக்கே இடம் இல்லாத வகையில் நாடு முழுவதும் மிகப்பெரிய செல்வாக்குடனும் புகழுடனும் இருக்கிறார். ரஜினி என்பதைவிட சூப்பர் ஸ்டார் என்றால் கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை கொண்டாடாத ரசிகர்கள் குறைவு.
சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த் பார்க்காத வெற்றியும் தோல்வியும் இல்லை. ஆனால், அப்போதும் இப்போதும் தனக்கென தனி வழியுடனும் ஆச்சரியப்படுத்தும் அங்கீகாரங்களுடன் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
அப்படி எவ்வளவோ சாதனைகளுக்கு மத்தியில், ரஜினியிடமிருந்து புதிய சாதனை வந்திருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் அதிக முறை ரூ. 500 கோடி வசூலித்த நடிகர்கள் பட்டியலில் தற்போது ரஜினியும் இணைந்துவிட்டார். 2.0, ஜெயிலர், கூலி, ஜெயிலர் - 2 என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்து பல பாலிவுட் நடிகர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இந்தச் சாதனையைச் செய்த நடிகர்களான ஆமீர் கான் (தங்கல், சீக்ரெட் சூப்பர்ஸ்டார், பிகே, தூம் - 3) பிரபாஸ் (பாகுபலி, பாகுபலி - 2, சலார், கல்கி ஏடி) ஆகியோருக்கு அடுத்ததாக ரஜினியும் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகராகக் கருதப்படும் ஷாருக்கான் கூட இந்தச் சாதனையைச் செய்யவில்லை. பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஷாருக்கானின் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள். தமிழில் ரஜினிக்கு அடுத்து முதல்வர் விஜய்யின் லியோ ரூ.500 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் பிற நடிகர்களின் வயதை ஒப்பிட மூத்தவரான ரஜினிகாந்த் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருவது இந்திய சினிமாவுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்து வருகிறது என்றால் மிகையல்ல. ரஜினியின் திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படமாக ஜெயிலர் - 2 மாற உள்ள சூழலில் இந்த புதிய சாதனையும் ரஜினி ரசிகர்களிடம் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
Actor Rajinikanth is on the list of actors who have grossed more than Rs 500 crores the most times.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.