விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமான கட்டா குஸ்தி - 2!
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் குறித்து...
நடிகர் விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக கட்டா குஸ்தி - 2 மாறியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த கட்டா குஸ்தி - 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வணிக ரீதியான வெற்றிப்படமாக மாறியுள்ளது.
மேலும், இரண்டாம் வாரத்திலும் நிறைய திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுடன் 700க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு வருவதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
முக்கியமாக, இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், விஷ்ணு விஷாலின் அதிகம் வசூலித்த திரைப்படமாக இப்படம் மாறியுள்ளது. இதற்கு முன், ராட்சசன் திரைப்படம் ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்ததே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
'Gatta Kusthi 2' has become actor Vishnu Vishal's highest-grossing film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.