இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதைப் பற்றி...
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் இடம்பெற்றிருந்தவர் அமன்பிரீத் சிங் கில். இவர் 2008 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் விளையாடியுள்ளார்.
இந்திய அணியில் விராட் கோலியின் சக வீரராக இருந்த கில், பஞ்சாப் அணிக்காக ஆறு முதல் தரப் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல்லிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார் அமன்பிரீத் சிங்.
Advertisement
Advertisement
ரவீந்திர ஜடேஜா மற்றும் பியூஷ் சாவ்லா போன்ற வீரர்களுடனும் விளையாடியுள்ளார். மேலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளையும் அவர் எடுத்தார்.
முதல் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் அங்கம் வகித்த இவர், பின்னர் பஞ்சாபின் மூத்த தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அமன்பிரீத் சிங் கில் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட் உலகை துயரில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் இன்னும் இதுவரை வெளிவரவில்லை.
அமன்பிரீத் வெறும் 36 வயதில் மரணமடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அமன்பிரீத் கில்லின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்காகவும் மனவலிமையைப் பெற பிரார்த்திக்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Amanpreet, a right-arm medium pacer, played six First-Class matches between 2006 and 2008, picking 11 wickets and scoring 42 runs with the bat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.