கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம்; வலுவான நிலையில் இந்திய அணி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில்லின் சதங்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில்லின் சதங்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி நியூ சண்டீகரில் இன்று (ஜூன் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் சதம் விளாசல்!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கே.எல்.ராகுல் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். அவர் 165 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 104 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசியும், ரிஷப் பந்த் அரைசதம் விளாசியும் அசத்தினர். ஷுப்மன் கில் 143 பந்துகளில் 103 ரன்களும் (11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ரிஷப் பந்த் 70 பந்துகளில் 50 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்து களத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி இரண்டு விக்கெட்டுகளையும், ரஹ்மான் ஷரீஃபி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
The Indian team is in a strong position in the Test match against Afghanistan, thanks to centuries from KL Rahul and captain Shubman Gill.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.