ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 230 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 230 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். கேப்டன் ஷுப்மன் கில் அதிகபட்சமாக 44 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
சாய் சுதர்சன் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 37* ரன்கள், ராகுல் திவாட்டியா 14* ரன்கள், ஜோஸ் பட்லர் 13 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 7 ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் பிரிஜேஷ் சர்மா இரண்டு விக்கெட்டுகளும், யஷ் ராஜ் புஞ்சா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.
Batting first in their IPL match against the Rajasthan Royals, the Gujarat Giants scored 229 runs for the loss of 4 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.