வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய மும்பை இந்தியன்ஸ் தலைமைப் பயிற்சியாளர்!
ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் அச்சமின்றி அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 579 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கட்டுப்படுத்த எங்களிடம் சில வழிகள் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். அறிமுக சீசனில் சிறப்பாக விளையாடியது போன்று, இரண்டாவது சீசனிலும் அதிரடியாக விளையாடி வருகிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். ஆட்டம் குறித்த புரிதலை அவர் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். அவரது விக்கெட்டினை வீழ்த்த எங்களிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. அதனை சரியாக செயல்படுத்தினால், அவரது விக்கெட்டினை சீக்கிரமாகவே கைப்பற்றுவோம் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்பைக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Mumbai Indians Head Coach Mahela Jayawardene has praised young player Vaibhav Suryavanshi, who has been displaying explosive form in the IPL tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.