முகப்பு
FIFA 2018

ஸ்பெயின் vs போர்ச்சுகல்: ரசிகர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பான ஆட்டம் இன்று நடைபெறுகிறது!

பல்வேறு கிளப் சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துள்ள அவருக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் நேற்று தொடங்கின. துவக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை ரஷியா 5-0 என வீழ்த்தியது. 

இதன் தொடர்ச்சியாக கால்பந்து ஜாம்பவான்களின் முதல் ஆட்டமாக ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் இன்று சோச்சியில் மோதுகின்றன. 

இதுவரை உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பி உள்ளது. கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற உற்சாகத்தில் போர்ச்சுகல் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது. இதுவரை ஆறு முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ள போர்ச்சுகல் அணி, முதல் முதலில் பங்கேற்ற 1966-ல் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. அதுவே போர்ச்சுகல் அணியின் சிறந்த உலகக் கோப்பைப் போட்டியாகும். 2006-ல் நான்காம் இடம் பிடித்தது. 

Advertisement

அதே நேரத்தில் 2010-ஆம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி கடந்த 2014 உலகக் கோப்பையில் நெதர்லாந்து, சிலி போன்ற அணிகளிடம் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. நிகழாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

2010-இல் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமான ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பெயின் அணிக்காக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆட உள்ளார். அதே நேரத்தில் 5 முறை தங்கக் காலணி விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும்.

பல்வேறு கிளப் சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துள்ள அவருக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments