FIFA 2018

நைஜீரியாவை எளிதில் வென்றது குரோஷியா

DIN

உலகக் கோப்பை கால்பந்து குரூப் டி பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியாவை 2-0 என எளிதில் வென்றது குரோஷியா. குரோஷியாவின் லுகா மொட்ரிக் ஒரு கோலடித்தார். அதே நேரத்தில் நைஜீரியாவின் ஓஹேனகரோ எபோ சேம் சேட் கோலடித்து குரோஷியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
காலின்கிராடில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இளம் வீரர்களைக் கொண்ட நைஜீரிய அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க போராடியது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.சூப்பர் ஈகிள்ஸ் எனப்படும் நைஜீரிய வீரர்களால் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.குரோஷிய தாக்குதல் ஆட்டக்காரர் மண்டுஸிக்கின் தொடர் முயற்சியால் நைஜீரிய தற்காப்பு கேள்விக்குறியானது.
எபோ சேம்சைட் கோல்: குரோஷியாவின் லுகா மொட்ரிக் அடுத்த கார்னர் வாய்ப்பில் பந்தை தடுக்க முயன்ற போது, நைஜீரிய வீரர் எபோ அடித்த பந்து சேம்சைட் கோலானது. இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.
பெனால்டி வாய்ப்பில் கோல்: 70-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர்கள் வில்லியம்-காங் ஆகியோர் தேவையின்றி குரோஷிய வீரர் மண்டுஸிக்கை கோல் பகுதியில் தடுத்து தள்ளி விட்டனர். இதையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை லுகா மொட்ரிக் சரியாக பயன்படுத்தி கோலடித்தார். இதன் மூலம் 2-0 என குரோஷியா வென்றது. இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளுடன் குரோஷியா குரூப் டி பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து அணிகள் ஆட்டம் டிராவில் முடிந்ததால் அந்த அணிகள் தலா 1 புள்ளியுடன் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT