ஐபிஎல்

ஐபிஎல்: ஸ்டம்புகளை பேட்டால் தட்டிவிட்டுச் சென்ற ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!

இதனால் கடுப்பான ரோஹித் சர்மா வெளியேறும்போது கள நடுவர் பக்கமிருந்த ஸ்டம்பை பேட்டால் தட்டி விட்டுச் சென்றார்...

எழில்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை. முதலில் ஆடிய கொல்கத்தா 232/2 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 198/7 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

இந்த ஐபிஎல் ஆட்டத்தில், 12 ரன்களில் குர்னி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. நடுவர் கொடுத்த அறிவிப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். டிஆர்எஸ் முறையில் அது அம்பயர்ஸ் கால் எனத் தீர்ப்பானது. இதனால் அவர் களத்தை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதனால் கடுப்பான ரோஹித் சர்மா வெளியேறும்போது கள நடுவர் பக்கமிருந்த ஸ்டம்பை பேட்டால் தட்டி விட்டுச் சென்றார். 

இதையடுத்து ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT