ஐபிஎல்

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகல்!

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல வீரர் புவனேஸ்வர் குமார் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை, அபுதாபி, ஷாா்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. 

கடந்த வெள்ளியன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டது. 

இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஆட்டங்களில் 0/25, 0/29, 2/25, 1/20 என அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் புவனேஸ்வரின் விலகல், ஹைதராபாத் அணிக்குப் பலத்த பின்னடைவாக இருக்கப் போகிறது.

புவனேஸ்வர் குமார் மட்டுமல்லாமல் தில்லி அணி வீரர் அமிஸ்த் மிஸ்ராவும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயலலிதா பிறந்த நாள்: ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள்

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

SCROLL FOR NEXT