ஐபிஎல்

ஐபிஎல் 2021 போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டர் யார்?

இறுதிச்சுற்றுக்கு முன்பு வரை 227 ரன்களும் 11 விக்கெட்டுகளும் எடுத்து ஐபிஎல் 2021 போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டராக...

DIN

ஐபிஎல் 2021-ன் சிறந்த ஆல்ரவுண்டருக்கான போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. 

2012, 2014 என இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இருமுறையும் ஐபிஎல் கோப்பையை கேகேஆர் அணி வென்றுள்ளது. இருமுறையும் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர், கெளதம் கம்பீர். 2012-ல் சிஎஸ்கேவும் கொல்கத்தாவும் மோதியதில் கொல்கத்தா அணி கோப்பையைக் கைப்பற்றியது. 

இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்பு வரை 227 ரன்களும் 11 விக்கெட்டுகளும் எடுத்து ஐபிஎல் 2021 போட்டியின் சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்கிறார் சிஎஸ்கே அணியின் ஜடேஜா.

ஐபிஎல் 2021: சிறந்த ஆல்ரவுண்டர்கள்

227 ரன்கள் + 11 விக்கெட்டுகள் - ஜடேஜா
320 ரன்கள் + 6 விக்கெட்டுகள்  - மொயீன் அலி 
245 ரன்கள் + 5 விக்கெட்டுகள்  - பொலார்ட் 
183 ரன்கள் + 11 விக்கெட்டுகள் - ரஸ்ஸல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT