ஐபிஎல்

தில்லி - கொல்கத்தா ஐபிஎல் ஆட்டம்: ரஸ்ஸல், பிருத்வி ஷா விலகல்

கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

தில்லிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் தில்லியும் கொல்கத்தா 4-ம் இடத்திலும் உள்ளன. இந்த ஆட்டத்தில் வென்றால் கொல்கத்தா அணி 4-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கும். தில்லி வென்றால் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறும். மேலும் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துவிடும். 

தில்லி - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தில்லி அணியில் பிருதிவ் ஷாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் ஸ்டீஸ் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். கொல்கத்தா அணியில் காயம் காரணமாக ரஸ்ஸல் இடம்பெறவில்லை. அதேபோல பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இல்லை. இவர்களுக்குப் பதிலாக டிம் செளதியும் தமிழ்நாடு அணிக்காக விளையாடும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியரும் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT