கோப்புப்படம் 
ஐபிஎல்

மும்பைக்கு எதிராக களமிறங்குகிறார் மேக்ஸ்வெல்: பெங்களூரு பந்துவீச்சு

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

DIN


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூருவில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டுக்குப் பதில் கிளென் மேக்ஸ்வெல் களமிறங்குகிறார்.

டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். மும்பையில் டைமல் மில்ஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு ஜெய்தேவ் உனத்கட், ரமன்தீப் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்கள் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT