காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஆடம் ஸாம்பாவுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9-வது இடத்தில் உள்ளது.
இதையும் படிக்க: ருதுராஜ் கெய்க்வாட்டுக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிப்பு!
ஆடம் ஸாம்பா விலகல்; மாற்று வீரர் சேர்ப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வரும் நிலையில், காயம் காரணமாக ஆடம் ஸாம்பா நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
காயம் காரணமாக விலகியுள்ள ஆடம் ஸாம்பாவுக்குப் பதிலாக ஹைதராபாத் அணியில் இடதுகை பேட்ஸ்மேனான சமரன் ரவிச்சந்திரன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
21 வயதாகும் சமரன் ரவிச்சந்திரன் இதுவரை 7 முதல் தர போட்டிகளிலும், 10 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி 1100 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
ஆடம் ஸாம்பாவுக்குப் பதிலாக மாற்று வீரராக சமரன் ரவிச்சந்திரன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.