சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். தோனி ஐபிஎல் போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னௌ நகரில் திங்கள்கிழமை(ஏப். 14) நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த போட்டியில் சுவாரசிய திருப்பங்கள் அரங்கேறின. முதல் இன்னிங்சில் 14-ஆவது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனி அடிக்காமல் நழுவவிட, அதனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து ஸ்டம்ப்பை பதம்பார்த்து பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கி அசத்தினார் தோனி.
இந்த நிலையில், இந்த விக்கெட் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பராக 200-ஆவது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறார் தோனி. 271 ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இதுவரை 155 கேட்ச், 46 ஸ்டம்பிங் செய்து 201 விக்கெட்களை வீழ்த்த காரணமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில், தினேஷ் கார்த்திக்(182 விக்கெட்), அதனைத்தொடர்ந்து, ஏபி டி வில்லியர்ஸ்(126 விக்கெட்) உள்ளனர்.
இந்த போட்டியில் சுவாரசியமானதொரு ஓவராக கடைசி ஓவர் அமைந்ததை யாராலும் மறுக்க முடியாது.
கடைசி ஓவரில் மகிஷா பதிரானா பந்தை பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அடிக்காமல் நழுவவிட, அதனை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடித்து எதிர்முனையில் இருந்த ஸ்டம்ப்பை நோக்கி வீசி பேட்ஸ்மேனை ரன் அவுட் ஆக்கி அசத்தினார் தோனி. இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்துல் ஷமாத் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்த விடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்புறமென்ன விசில் போடு..!
இதையும் படிக்க: வயதான ஆட்டநாயகன்! தோனி படைத்த சாதனைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.