ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 17) முதல் போட்டிகள் மீண்டும் தொடங்குகின்றன.
பெங்களூருவில் இன்று (மே 17) நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. பெங்களூருவில் மழை பெய்து வருவதால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்றவுடன் டாஸ் சுண்டப்பட்டு போட்டி விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.