ஐபிஎல் போஸ்டர் படம்: எக்ஸ் / ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் 2025-இல் அடுத்த 10 நாள்கள் மிகவும் முக்கியமானவை..! முன்னாள் வீரர் பேட்டி!

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் கூறியதாவது...

DIN

பிளே ஆஃப்ஸுக்கான போராட்டம் தீவிரமடைவது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 சீசன் மீண்டும் இன்றுமுதல் (மே.17) தொடங்குகின்றன.

போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் நிபுணரும் முன்னாள் இந்திய வீரருமான சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரஸ் ரூமில் அடுத்து வரும் 8-10 நாள்கள் முக்கியமானது எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

சுனில் கவாஸ்கர் பேசியதாவது:

ஒரு பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கில் இல்லாமல் நிற்பது போல, இந்த இடைவேளையும் சில அணிகளின் ரன்னிங்கை பாதிக்கக் கூடும். அதேசமயத்தில் தில்லி, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகளுக்கு இது மீளாய்வுக்கும் உதவலாம்.

பிளே ஆஃப் சுற்றுகள் நெருங்கும் இந்த 8–10 நாள்கள் மிகவும் முக்கியமானவை.

தோனி, ரோஹித், விராட் அளவுக்கு இளம் கேப்டன்கள் இன்னும் வளர வேண்டியிருக்கிறது. ஆனால் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வித்தியாசமான அணுகுமுறையுடன் வருகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துக்கள் மலரும்... நிகிதா தத்தா!

பருவம்... மாளவிகா மேனன்!

கோல்டன்... திவ்ய பாரதி!

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

SCROLL FOR NEXT