முகப்பு
ஐபிஎல்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 9:30 PM
சாய் சுதர்சன்
பகிர்:

ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சுப்மன் கில், சாய் சுதர்சன் துவக்க பேட்டர்களாக களமிறங்கினர். கில் 32 ரன்கள் எடுத்து வெளியேற பட்லர் உள்ளே வந்தார்.

Advertisement

மறுபுறம் சாய் சுதர்சன் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.

இதன்மூலம் இந்த சீசனில் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து பட்லர் தன் பங்கிற்கு 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. வாசிங்டன் சுந்தர் 19, ஜேசன் ஹோல்டர் 23 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றனர்.

பந்துவீச்சில் புவனேசுவர் குமார், ஹேசல்வுட், சுயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

summary

Sai Sudharsan's third IPL century powered GT to 205/3 against RCB in their IPL 2026 clash in Bengaluru.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.