முகப்பு
கிரிக்கெட்

ஹார்திக் பாண்டியாவின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!

குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் நிகழ்த்திய சாதனை குறித்து...

ஆரஞ்ச் கேப் அணிந்த சாய் சுதர்சன். - படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.
பகிர்:

குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் ஹார்திக் பாண்டியாவின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 247/2 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 218/4 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இருந்தும் இவரது அணி இலக்கை அடைய முடியாமல் தோல்வியுற்றது.

Advertisement

Advertisement

தொடர்ச்சியாக நான்காவது முறையாக அரைசதம் அடித்த முதல் குஜராத் டைட்டன்ஸ் வீரராக சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, ஹார்திக் பாண்டியா, ஷுப்மன் கில் தொடர்ச்சியாக மூன்று முறை அரைசதம் கடந்திருக்கிறார்கள்.

சாய் சுதர்சன் கடைசி ஏழு போட்டிகளில் 100, 87, 6, 57, 55, 61, 53* ரன்கள் குவித்துள்ளார். அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 554 ரன்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

Most successive 50-plus scores for GT

4* - சாய் சுதர்சன் (2026)

3 - ஹார்திக் பாண்டியா (2022)

3 - சாய் சுதர்சன் (2024-25)

3 - ஷுப்மன் கில் (2025-26)

summary

Sai Sudharsan breaks Hardik pandya record in Gujarat Titans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments