ஐபிஎல்-2019

சன்ரைஸர்ஸ் சிறப்பான சம்பவத்தில் 'அதளபாதாள' தோல்வியடைந்த ஆர்சிபி

Raghavendran

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வியடைந்தது.

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 11-ஆவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சன்ரைஸர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசினார்கள். டேவிட் வார்னர் 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 100* ரன்கள் குவித்தார். ஜானி பேர்ஸ்டோ 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் குவித்தார்.

இதனால் அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைஸர்ஸ் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிகபட்சமாக காலின் டி கிராண்ட்ஹோமி 37 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

சன்ரைஸர்ஸின் முகமது நபி 4 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT