ஐபிஎல்-2020

மணிக்கு 156.2 கி.மீ. வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்த தில்லி வீரர்

DIN

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசியவர் என்கிற பெருமையை தில்லி அணி வீரர் அன்ரிச் நோர்கியோ பெற்றுள்ளார்.

துபையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தில்லி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்து வீழ்ந்தது. 

ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தபோது 3-வது ஓவரை நோர்கியோ வீசினார். அது அவருடைய முதலாவது ஓவர். 5-வது பந்தை மணிக்கு 156.2 கி.மீ. வேகத்தில் வீசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நோர்கியோ, சக நாட்டவரான டேல் ஸ்டெயினின் சாதனையை வீழ்த்தியுள்ளார். ஸ்டெயின், 2012-ல் மணிக்கு 154.4 கி.மீ. வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது.

ஐபிஎல் போட்டியில் அதிவேகப் பந்துவீச்சு

156.2 - நோர்கியோ, 2020
155.2 - நோர்கியோ, 2020
154.7 - நோர்கியோ, 2020
154.4 - ஸ்டெய்ன், 2012
154.2 - ரபாடா, 2019
154.2 - நோர்கியோ, 2020

(மூவருமே தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT