ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி வெண்கலம் யாருக்கு?: ஜெர்மனியுடன் மோதவுள்ள இந்திய அணி

DIN


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பலம் பொருந்திய ஜெர்மனியுடன் மோதுகிறது இந்திய அணி.

இன்று நடைபெற்ற அரையிறுதியில் உலக சாம்பியன் பெல்ஜியத்திடம் 2-5 என்கிற கோல் கணக்கில் தோற்றது இந்திய அணி. 1980-க்குப் பிறகு தங்கம் வெல்கிற கனவு இந்தத் தோல்வியால் தகர்ந்தது.  

மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா ஜெர்மனியை 3-1 எனத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இறுதிச்சுற்றில் பெல்ஜியம் - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் மோதவுள்ளன. வெற்றி பெறும் அணிக்குத் தங்கப் பதக்கம் கிடைக்கும்.

இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும் ஜெர்மனியும் மோதவுள்ளன. கடந்த ரியோ ஒலிம்பிக்ஸில் ஜெர்மனி அணிக்கு வெண்கலம் கிடைத்தது. 

ஆகஸ்ட் 5 அன்று இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT