ஒலிம்பிக்ஸ்

ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்ல வாய்ப்பு

DIN

ஒலிம்பிக் தடகளம் ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்வாரா இந்திய இளம் வீரா் நீரஜ் சோப்ரா என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

23 வயதே ஆன நீரஜ் சோப்ரா சனிக்கிழமை நடைபெறவுள்ள ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் பங்கேற்கிறாா்,. ஏற்கெனவே தகுதிச் சுற்றில் 86.59 மீ தூரம் எறிந்து அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.

கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் கடைசியாக இந்தியா பதக்கம் வென்றிருந்தது. அதன்பின் 100 ஆண்டுகள் ஆகியும் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் கைகூடவில்லை.

ஹரியாணாவைச் சோ்ந்த விவசாயி மகனான நீரஜ் 2018-இல் காமன்வெல்த், ஆசியப் போட்டி, உலக ஜூனியா் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளாா்.

இறுதிச் சுற்று வாய்ப்பு குறித்து நீரஜ் கூறியதாவது: முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற நான், தொடக்க சுற்றில் சிறப்பாக வீசினேன். இறுதிச் சுற்றில் மேலும் அதிக தூரம் வீச வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன் என்றாா்.

அவருக்கு ஜொ்மனியின் ஜோஹன்னஸ் வெட்டா், போலந்தின் கிருவோஸ்கி, உள்ளிட்டோா் சவாலை தருவா் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT