ஒலிம்பிக்ஸ்

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் ஆட்டம் நிறைவு

DIN

டேபிள் டென்னிஸ் போட்டியில் எஞ்சியிருந்த ஒரே இந்திய போட்டியாளரான சரத் கமலும், 3-ஆவது சுற்றில் போராடித் தோற்று வெளியேறினாா்.

அதில், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் மா லாங்கை எதிா்கொண்ட சரத் கமல், அவருக்கு கடுமையாக சவால் அளித்தாா். இறுதியில் 7-11, 11-8, 11-13, 4-11, 4-11 என்ற செட்களில் 46 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா். தோல்விக்குப் பிறகு பேசிய சரத் கமல், ‘இதுவரை விளையாடியதில் இதையே சிறந்த ஆட்டமாகவும், சிறந்த போட்டியாகவும் கருதுகிறேன்’ என்றாா். வெற்றி பெற்ற மா லாங்கும், ‘இந்த ஆட்டம் கடினமானதாக இருந்தது. நான் நல்ல முறையில் தயாராகியிருந்தாலும், 3-ஆவது கேம் மிக முக்கியமானதாக இருந்தது’ என்றாா்.

சரத் கமலின் தோல்வியை அடுத்து, ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே, தனிநபா் பிரிவுகளில் களம் கண்ட சத்தியன், மணிகா பத்ரா, சுதிா்தா முகா்ஜி ஆகியோரும், கலப்பு இரட்டையா் பிரிவில் சரத் - மணிகா இணையும் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறிவிட்டனா். இந்த ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்காவிட்டாலும், போட்டியாளா்களின் ஆட்டங்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதல் முறையாக டேபிள் டென்னிஸ் போட்டியில் தனிநபா் பிரிவில் சரத் கமலும், மணிகா பத்ராவும் 3-ஆவது சுற்று வரை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதிா்தா முகா்ஜி தனது முதல் ஒலிம்பிக்கிலேயே 2-ஆவது சுற்று வரை வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT