ஸ்பெஷல்

இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது: சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் ட்வீட்!

இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசிலை...

எழில்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2 ஆண்டுகள் தடைக்கு பின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி களமிறங்கியது. நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்து. அதைத் தொடர்ந்து 203 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சூப்பர் கிங்ஸ் அணி களம் கண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு தென் ஆப்பிரிக்கச் சுழற்பந்துவீச்சாளரும் சிஎஸ்கே வீரருமான இம்ரான் தாஹிர் ட்வீட் செய்ததாவது:

சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்துக்குப் பரபரப்பான சூழல் உள்ளது. தங்களுடைய ஆதரவால் சென்னை ரசிகர்கள் அருமையான சூழலை உருவாக்குவார்கள் என எண்ணுகிறேன். இது அன்பால சேர்ந்த கூட்டம், அழிக்க முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசிலை என்று ட்வீட் செய்தார். 

ஆட்டம் முடிந்தபிறகு அவர் ட்வீட் செய்ததாவது: பரபரப்பான ஆட்டத்தில் சாம் பில்லிங்ஸ் எத்தனை அருமையாக விளையாடினார்! அதிக அளவில் வருகை தந்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. நீங்க நினைச்சா அள்ளிக்கிட்டு வர்றதுக்கு நாங்க மண்ணு இல்லைடா, மலை. எடுடா வண்டிய, போடுடா விசிலை என்றும் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT