இரண்டு ஆட்டங்கள் ரெய்னா விளையாட மாட்டார்: நெருக்கடியில் சிஎஸ்கே!
ஞாயிறன்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஏப்ரல் 20 அன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும்...
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கெண்டைக்கால் தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட சுரேஷ் ரெய்னா, இரு ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ஞாயிறன்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஏப்ரல் 20 அன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா, இதுவரை சிஎஸ்கேவின் எந்தவொரு ஆட்டத்தையும் தவறவிட்டதில்லை. அந்தவகையில் முதல்முறையாக ரெய்னா இல்லாமல் களமிறங்கவுள்ளது சிஎஸ்கே. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் வரை தொடர்ச்சியாக 158 டி20 ஆட்டங்கள் சிஎஸ்கேவுக்காக விளையாடியுள்ளார் ரெய்னா.
அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் நல்ல ஃபீல்டராகவும் உள்ளவர் ரெய்னா. அணிக்குப் பக்கபலமாக இருக்கும் ரெய்னா போன்ற ஒரு வீரர் இல்லாமல் இறங்குவதால் நெருக்கடியைச் சந்திக்கிறது சிஎஸ்கே அணி. ரெய்னாவுக்குப் பதிலாக முரளி விஜய் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.