விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கெளதம் கம்பீர், அமித் மிஸ்ரா ஆகியோருக்குப் பதிலாக கே.எல்.ராகுல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஜெயந்த் யாதவுக்கு இது அறிமுகப் போட்டியாகும். அவருக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி இந்திய அணியின் தொப்பியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஜெயந்த் யாதவ், இந்தியாவின் 286-ஆவது டெஸ்ட் வீரர் ஆவார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 455 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்துத் தரப்பில் ஆண்டர்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன்பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இந்திய அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் குக்கை கிளீன் போல்ட் செய்து அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தார் ஷமி. ஸ்டம்பு பறந்த விதம் கண்கொள்ளாக் காட்சி! அதன் வீடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.