செய்திகள்

மாநில மகளிர் செஸ்: சென்னை வீராங்கனை முதலிடம்

DIN

திருவாரூரில் நடைபெற்ற மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை முதலிடம் பெற்றார்.
திருவாரூரில், மாவட்ட செஸ் கழகம் மற்றும் திருவாரூர் சிஏ ஹோண்டா நிறுவனம் இணைந்து வழங்கிய 45-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஏப்.23 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டியில் சென்னை வீராங்கனை ஆர். திவ்யலட்சுமி முதலிடம் பெற்றார். அடுத்து சென்னையைச் சேர்ந்த வீராங்கனைகள் பாலகண்ணம்மா இரண்டாமிடமும், வி. ரிந்தியா மூன்றாமிடமும் ஈரோடு வீராங்கனை அபிராமிஸ்ரீநிதி நான்காமிடமும் சென்னை வீராங்கனை சரண்யா ஐந்தாமிடமும் பெற்றனர்.
முதல் 4 இடங்கள் பெற்ற வீராங்கனைகள் 2017 ஜூலை மாதம் கர்நாடகத்தில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்பார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT