செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரணீத், அஜய் ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உலக பாட்மிண்டன் போட்டியில் இந்தியா இதுவரை தங்கம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை சிந்து தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 8 வீராங்கனைகள், 16 வீரர்கள் என மொத்தம் 24 பேர் பங்கேற்கின்றனர்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சீசனின் முதல் போட்டியான பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸில் பங்கேற்பதை உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் உறுதி செய்துள்ளார். கடந்த ஜனவரியில் பிரிஸ்பேன் போட்டியின் மூலம் சீசனைத் தொடங்கிய நடால், பிரெஞ்சு ஓபனில் வாகை சூடியதோடு, தரவரிசையிலும் முதலிடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
பல்கேரியாவின் பனாகியூரிஷ்ட் நகரில் நடைபெற்ற பல்கேரிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் செüம்யஜித் கோஷ்-சத்தியன் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
வின்ஸ்டன் சலேம் ஓபன், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மும்பை வீரர் பூரவ் ராஜாவுடன் இணைந்து களமிறங்குகிறார். பூரவ் ராஜா, பயஸின் 119-ஆவது இணை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் போர்பெட்டோ நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் லக்ஷய் ஷெரோன்-மணீஷா கீர் ஜோடி வெண்கலம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT