செய்திகள்

உலக ஹாக்கி லீக்: ஆஸ்திரேலியா சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்

DIN

உலக ஹாக்கி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது. பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணிகளுமே விளையாடியதால் ஆரம்பம் முதலே ஆட்டம் விறு விறுப்பாக இருந்தது.
இதனால் முதல் கால்மணி நேரம் வரையில் இரு அணிகளுக்குமே கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா கோல் கணக்கை தொடங்கியது. அப்போது கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக்கினார் அந்த அணியின் ஜெரிமி ஹேவார்ட்.
அதற்கு பதிலடியாக 18-ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டீனா வீரர் அகஸ்டின் புகாலோ ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்திலும் இந்த நிலையே தொடர, 58-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது.
அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறாமல் கோலாக்கினார் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ். எஞ்சிய நேரத்தில் ஆர்ஜென்டீனா கோல் அடிக்காத காரணத்தால், இறுதியில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
இந்தியா வெற்றி: இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சுனில் செüமர்பெட் 21-ஆவது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 54-ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஜெர்மனி வீரர் மார்க் அப்பெல் 36-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். கடந்த சீசனிலும் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT