செய்திகள்

கார் விபத்தில் 67 வயது பெண்மணி பலி: கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை ஜாமீனில் விடுவிப்பு

எழில்

பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை (54) காவல்துறை இன்று கைது செய்தது.

மஹாராஷ்டிராவில் உள்ள தர்கர்லி கடற்கரைக் கிராமத்துக்குச் செல்வதற்காக புனே - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோல்ஹாபூர் வழியாகத் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார் மதுகர்.

இன்று காலையில் கோல்ஹாபூரின் காகல் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த வயதானப் பெண்மணி மீது மதுகர் ஓட்டி வந்த கார் பலமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த ஆஷாதய் கம்ப்ளே என்கிற 67 வயதுப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து ரஹானாவின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT