செய்திகள்

அமெரிக்கா: இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் தேர்வு

DIN

அமெரிக்காவில் ஆடவர் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் (19) தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விருதை இளம் வயதிலேயே பெறும் வீரர் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றுள்ளார்.
அமெரிக்கா கால்பந்து அணியிலும், ஜெர்மனியின் புரோஸியா டோர்ட்மண்ட் கிளப் அணியிலும் இவர் விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு அமெரிக்கா கால்பந்து அணியில் 9 முறை விளையாடிய அவர், 6 கோல்களை பதிவு செய்துள்ளார்.
விருது கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:
மிக இளம் வயதில் எனக்கு கிடைத்த இந்த விருதை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், தொடர்ந்து ஆதரவு அளித்துவருபவர்களுக்கும் நன்றி என்றார் கிறிஸ்டியன். இதற்கு முன்பு, அந்நாட்டு கால்பந்து அணியின் முன்னாள் வீரர் லாண்டன் டோனோவன் கடந்த 2003-ஆம் ஆண்டில் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டபோது இளம் வயதில் இவ்விருதை பெறுபவராக இருந்தார். அப்போது அவருக்கு 21 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT