செய்திகள்

விக்கிபீடியா வழியாகத் தன் வயதை அறிந்துகொண்ட பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்!

எழில்

விக்கிபீடியா என்கிற தகவல் சுரங்கம் எல்லோருக்கும் பல வழிகளிலும் பயனளித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விக்கிபீடியா வழியாகவே தன்னுடைய வயதை அறிந்து கொண்டதாக ட்வீட் செய்துள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

இதுபற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: என் வயது என்ன என்று அறிந்துகொள்ள விக்கிபீடியாவைப் பயன்படுத்தினேன். எனக்கு எத்தனை வயது என்பதை மறந்துபோனேன் என்று கூறியுள்ளார். 

தாயாகியிருக்கும் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், அபுதாபியில் நடைபெறவுள்ள முபாதலா கண்காட்சி டென்னிஸ் போட்டி மூலம் 2018-ஆம் ஆண்டு சீசனை தொடங்கவுள்ளார். இத்தகவலை செரீனா அறிவித்துள்ளார். சனிக்கிழமை நடைபெறவுள்ள கண்காட்சி போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஜெலீனாவை எதிர்கொள்கிறார் செரீனா. இதையடுத்து ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்றத் திட்டமிட்டுள்ளார்.

36 வயது செரீனா கடந்த சிலமாதங்களாக அவர் எந்தப் போட்டியிலும் பங்குபெறவில்லை. கடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாதம் கர்ப்பமாக இருந்தார். எனினும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆனார். இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் 'ஓபன் எரா'வில் (1968-ல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அது முதலான காலமே "ஓபன் எரா' ஆகும்.) அதிக பட்டங்களை (23) வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார் செரீனா. முன்னதாக ஸ்டெஃபி கிராஃப் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும்பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார் செரீனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT